Cinemaமீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

மீண்டும் ரஜினியுடன் இணையும் நடிகை ஷோபனா

-

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் ‘First Look’ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ரஜினிகாந்த் தற்போது ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில் இப்படம் ஒக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 படப்பிடிப்பில் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார். கடந்த ஆறு மாத காலமாக இப்படத்தின் வேலைகளில் இருந்த லோகேஷ் தற்போது நடிகர்களின் தேர்வை தொடங்கியுள்ளார். அதன்படி இப்படத்தில் நடிக்க பிரபல நடன மாஸ்டர் சாண்டி முதல் ஆளாக கமிட்டாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் மிரட்டலான வில்லன் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகின்றதாம். அந்த வகையில் பிரபல நடிகையான ஷோபனாவை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க லோகேஷ் முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது ஷோபனாவிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். ஷோபனாவிற்கும் கதை மிகவும் பிடித்திருப்பதால் கண்டிப்பாக அவர் தான் தலைவர் 171 திரைப்படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகின்றது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் தளபதி படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தின் மூலம் ஷோபனா நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...