Sportsபஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து பேர்ஸ்டோவுடன் அணி தலைவர் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 15 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 6 ஓட்டங்களிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க. இதையடுயடுத்து ப்ரப்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களம் புகுந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ஓட்டங்களும், ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , தனுஷ் கோட்யான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தனுஷ் கோட்யான் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 18 ஓட்டங்களும் , ரியான் பராக் 18 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது . பஞ்சாப் அணியின் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...