Cinemaசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’

-

இயக்குநர் ராம் நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது V House Productions சார்பில் தயாரிக்கிறார்.

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், 46-வது மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழா வரும் 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் “Limelight” பிரிவில் திரையிட ‘விடுதலை’ , மற்றும் ‘ஜிகர்தண்டா Double X’ படங்கள் தேர்வாகியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

Online Visa மோசடிகள் பற்றி உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி

ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தொடர் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் வரவுள்ள பிரபல அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் துரித உணவு நிறுவனமான Wendy’s தனது முதல் கடையை ஆஸ்திரேலியாவில் நாளை திறக்க உள்ளது. 2034க்குள் 200 Wendy’s கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல்...

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பல விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

கடந்த 5 ஆண்டுகளில், விக்டோரியா மாநில காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் குழு பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைக்கு குற்றம் சாட்டப்பட்டது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 683...

விக்டோரியாவில் நிலச்சரிவில் சிக்கி பயங்கர விபத்துக்குள்ளான வீடு

விக்டோரியா மாநிலத்தில் மலைச் சரிவில் வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவினால் வீடு முற்றாக...