Adelaideதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அடிலெய்ட் ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தப் போராட்டம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அடிலெய்ட் ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தப் போராட்டம்

-

பல கோரிக்கைகளை முன்வைத்து, அடிலெய்ட் ரயில் சாரதிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பல ஊதியக் கோரிக்கைகளை முன்வைத்து மே 2-ம் தேதி 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

தொழிற்சங்கங்கள் நான்கு ஆண்டுகளுக்கு 20 சதவீத ஊதிய உயர்வைக் கோரின, ஆனால் அந்தக் காலகட்டத்தில் 14.7 சதவீத ஊதிய உயர்வையே பெற்றனர்.

அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற அவசர சந்திப்பை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊதியம் தொடர்பாக அரசாங்கத்துடன் இருதரப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தானதாக தொழிற்சங்கத்தின் கிளை அமைப்பாளர் ஹேடன் பாயில் குறிப்பிட்டார்.

தங்கள் உறுப்பினர்களுக்கு நியாயமான பலன் கிடைக்கும் என்று தொழிற்சங்கங்கள் நம்புகின்றன.

உத்தேச ஒப்பந்தங்களில் முற்போக்கான தீர்வுகள் காணப்படாவிட்டால், மீண்டும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...