சிட்னி விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தரவை மீறி ஓடுபாதைக்கு அருகில் ஓடி விமானத்தில் ஏற முயன்ற 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த 30 வயதுடைய நபர், பாதுகாப்புப் பகுதியினூடாக ஓடிச்சென்று தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை நோக்கிச் செல்லும் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் அவர் நுழைய முற்பட்டதாகவும், பயணப் பொதிகளை கையாளுபவர்கள் தலையிட்டதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த நபர் மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், மேலும் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது விசாரணை நடத்தப்படும்.
அவர் மீது வேறு எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்றும், அடுத்த 12 மாதங்களுக்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.