Sportsமும்பையை வீழ்த்தி வென்றது லக்னோ - IPL 2024

மும்பையை வீழ்த்தி வென்றது லக்னோ – IPL 2024

-

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

மும்பை அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா (4 ஓட்டங்களுக்கும்) மற்றும் இஷான் கிஷன் (32 ஓட்டங்களுக்கும்) வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், மும்பை அணி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தவித்தது. இந்த நிலையில், களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி 46 ஓட்டங்கள் பெற்று பின் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா (0) முதல் பந்திலேயே அவுட் ஆனது அணியினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சுலபமான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி (0) முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.

ஆனால், கேப்டன் கே.எல். ராகுல் (28 ஓட்டங்களும்) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (62 ஓட்டங்களும்) எடுத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு நடத்தினர். ஸ்டோய்னிஸ் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Latest news

லட்சக்கணக்கான ஆட்டிசம் குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை

மத்திய அரசு, லட்சக்கணக்கான ஆட்டிசம் உள்ள குழந்தைகளை NDIS-ல் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Mark Butler நேற்று 46 பில்லியன் டாலர் அரசு...

22 பரிந்துரைகளை செயல்படுத்தும் சட்டங்களை சீர்திருத்தும் விக்டோரியா அரசாங்கம்

குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க விக்டோரியா அரசு சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான...

வீட்டிலேயே இரத்த அழுத்தத்தை துல்லியமாக எப்படிக் கண்காணிப்பது?

ஆஸ்திரேலிய பெரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், பலர் வீட்டிலேயே அதைச் சரிபார்த்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம் சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது இதய...

NSW இன் மிகவும் பிரபலமான கைதி ஒருவர் மீது தாக்குதல்

NSW இன் மிகவும் பிரபலமான கைதிகளில் ஒருவர் Goulburn Supermax சிறைச்சாலைக்குள் நடந்த வன்முறை தாக்குதலில் குத்தப்படும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. Brothers for Life நிறுவனர்...

ஆஸ்திரேலியர்களின் வீடுகள் பற்றிய புதிய அறிக்கை

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தங்களுக்குத் தேவையானதை விடப் பெரிய வீடுகளில் வசிப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியர்களில் 60% பேர் தனியாகவோ அல்லது வேறொரு நபருடனோ வசிப்பதாக ஒரு...

22 பரிந்துரைகளை செயல்படுத்தும் சட்டங்களை சீர்திருத்தும் விக்டோரியா அரசாங்கம்

குழந்தைகள் பாதுகாப்பை அதிகரிக்க விக்டோரியா அரசு சட்ட அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. மெல்பேர்ண் குழந்தை பராமரிப்பு மையங்களில் Joshua Dale Brown செய்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான...