Newsயாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த...

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

-

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி இரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

கெனடி ஜஸ்மின் (37) என்ற 2 பிள்ளைகளின் தாயார் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவரது 16 வயதான மகன் காணாமல் போயிருந்தார். அவர் உளநலச்சிக்கல்களுக்கு உள்ளானவர் என்றும் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையானவர். கையடக்க தொலைபேசியை தருமாறு அடிக்கடி வீட்டில் சண்டையிடுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வாய், மூக்கால் இரத்தம் வெளியேறியிருந்தது. இரத்தத்தினால். Im killing family உள்ளிட்ட சில வாசகங்கள் வீட்டு சுவரில் எழுதப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட சிறுவன், கொலை மற்றும் தற்கொலை தொடர்பான குறிப்புக்களை சேகரித்து வைத்திருந்ததை, வீட்டில் சோதனையிட்ட பொலிசார் கண்டறிந்தனர்.

சம்பவ தினத்தன்றும் கையடக்க தொலைபேசிக்காக சிறுவன் சன்டையிட்டுவிட்டு பின்னர், சிறுவன் கத்தி, மற்றும் ஊசியை தனது படுக்கையில் வைத்திருந்ததை அவதானித்ததால், அவரது சகோதரியை அன்று இரவு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று தானே தாயாரை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

தாயார் தூக்க மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.

கொலையின் பின்னர் கொழும்புக்கு பஸ்ஸில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பஸ்ஸில் ஏறி யாழ்ப்பாணம் சென்று, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

இப்போது Facebook இலும் மேம்பட்டுள்ள AI தொழிநுட்பம்

Facebook-இன் சமூக ஊடக தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் AI Meta, கடந்த சில மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளதாக Facebook நிறுவனர் Mark Zuckerberg கூறுகிறார். முதலில்...

டிரம்பின் முடிவால் ஆஸ்திரேலியா எவ்வாறு பாதிக்கப்படும்?

ஆஸ்திரேலிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஆரம்ப 10 சதவீத இறக்குமதி வரியை மாற்றாமல் வைத்திருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று, டிரம்ப் பல...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் சர்வதேச நபர் நேற்று வெளிநாட்டிலிருந்து அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...