உலக சாதனை படைத்திருக்கும் பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

0
364

இரவின் நிழல் திரைப்படத்தை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரே ஷாட்டில் எடுத்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில், முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், பட குழுவினருக்கும் ஏ.ஆர். ரகுமானுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் எனவும் ரஜினிகாந்த் கைபட கடிதம் எழுதியுள்ளார். இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன் எடுத்துள்ள முயற்சியை பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே வீடியோ வாயிலாக பார்த்திபன் குறித்தி பேசியிருந்தார். அது இரவின் நிழல் மேக்கிங் வீடியோவிலும் இடம்பெற்றது. இந்த நிலையில் தன் கைபட கடிதம் ஒன்றை எழுதி படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

Previous articleஜப்பானில் வேகமெடுக்கும் கொரோனா : 1.5 லட்சத்தை கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
Next articleஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு