Newsஅனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் அம்புலன்ஸ் உதவி கேட்ட போராட்டக்காரர்கள்

-

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படையினர் தடுத்து நிறுத்தியதனையடுத்து அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் போராட்டக்கார்கள் உதவி கேட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் இன்று வெள்ளிக்கிழமை படைத்தரப்பினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1:30 மணியளவில் நுழைந்த காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட முப்படையினர் அரச தலைவர் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தியோர் மீது கடும் தாக்குதல் நடத்தி பலரை கைது செய்தும் காயப்படுத்தியும் உள்ளனர்.

போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படைத்தரப்பினர் வீதிகளில் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படையினரால் தாம் முற்றுகையிடப்பட்ட காட்சியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அனைத்துலக நாட்டு தூதரகங்களுக்கு அனுப்பி, காயப்பட்ட போராட்டக்காரர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து, அனைத்துலக நாட்டு தூதரக அதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்களை சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

படைத்தரப்பினர் அனுமதி வழங்கியதனையடுத்து, காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

2025 இல் பிறந்த ஆஸ்திரேலியாவின் முதல் குழந்தை

புத்தாண்டு விடியலுடன், ஆஸ்திரேலியாவின் புதிய பீட்டா தலைமுறையின் முதல் பிறப்பு ஜனவரி 1 ஆம் திகதி நள்ளிரவு 12.05 மணிக்கு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டுக்குப் பிறகு NSW...

NSW மாளிகையில் மோதிய Ferrari கார்

Ferrari கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள Watsons Bay மாளிகைக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்...

டிரம்பின் ஹோட்டல் முன் வெடித்த Musk-இன் கார்

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் உள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே எரிபொருள் கேனிஸ்டர்கள் மற்றும் பட்டாசு மோட்டார்கள் நிரப்பப்பட்ட டெஸ்லா...

ஆயுளை 20 நிமிடங்கள் குறைக்கும் ஒரு சிகரெட்!

புத்தாண்டில் புகைபிடிப்பதை விட்டுவிட நீங்கள் தயாரானால், உங்கள் ஆயுட்காலம் நீட்டிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது . பிரித்தானிய ஆய்வுக் குழு ஒன்று இந்த ஆய்வை நடத்தி,...

ஒரு வருடத்தில் மெல்பேர்ண் வாடகை விலைகள் மாறியுள்ள விதம்

2024ல் முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளின் விலை எப்படி குறைந்துள்ளது என்பது குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, மெல்போர்னில் வாடகை வீட்டு மதிப்புகள் மூன்று சதவீதமும்,...

புத்தாண்டு தினத்தன்று உலகையே அதிர வைத்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி சேவை...