Sydneyசிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

சிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

-

சிட்னி சதர்லேண்ட்ஷயர் கடற்கரையில் உள்ள கர்னெல் என்ற இடத்தில் இரண்டு இளம் பெண்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாறையில் இருந்த பெண்கள் குழு பலத்த அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பெண் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.30 மணியளவில் கர்னெல் கடற்கரையில் பெண்கள் குழுவொன்று விபத்துக்குள்ளானதாக அவசர சேவை பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய பெண்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்த போதிலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் பாறைகளில் மோதி முதுகுத்தண்டில் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி மீனவர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் பகுதியாக இருந்தாலும், இந்தப் பெண்கள் மீன் பிடித்ததாக எந்தத் தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடைய நேபாள நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் இதே கடற்கரையில் இரண்டு மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

Latest news

‘அறிவிக்கப்படாத ஒவ்வாமை’ காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட தயிர் பைகள்

Woolworths, Coles மற்றும் ஐஜிஏ கடைகளில் விற்கப்பட்ட தயிர் பைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத ஒவ்வாமை காரணமாக இந்த திரும்பப் பெறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அல்லது 13...

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

TikTok-ஐ வேண்டாம் என்று கூறிய ட்ரம்ப் செய்த காரியம்

வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக TikTok கணக்கைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி, TikTok-ஐ தடை செய்ய முன்பு முயன்றார். 2020 ஆம்...

NSW-வில் 83 வயது முதியவரை தற்செயலாக கத்தியால் குத்திய நபர்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் கார் நிறுத்துமிடத்தில் 83 வயது முதியவர் மீது "முட்டாள்தனமான" மற்றும் "தற்செயலாக" ஒருவர்...