Breaking Newsடலசிடம் பேரம் பேசிய நாமல்

டலசிடம் பேரம் பேசிய நாமல்

-

அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்த போது நாமல் தலையிட்டு டலசிடம் அருமையான திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.

அங்கு, டலசிடம் பேச்சு நடத்திய நாமல், ரணில் நிச்சயம் அரச தலைவராக வருவார் என்றும், அதன் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டம் போன்ற அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் பிரதமர் பதவி டல்லசுக்கு வழங்கப்படுமெனவும், பிரதமர் பதவிக்குரிய அதிகாரங்கள் பிரதமருக்கே வழங்கப்படும் எனவும் நாமல் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாமல் கொண்டு வந்த இந்த திட்டத்தில் டலஸ் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. அதன் பிரகாரம், பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடம் ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரி நாமல் தொலைபேசியில் அழைப்பு விடுக்க தொடங்கினார்.

ஆனால், நாமலின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுக்கு நாமலால் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.

அதேபோன்று அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடம் முறையிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டும் ‘Cashrewards’ இணையதளம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான cashback வலைத்தளமான Cashrewards, இன்று முதல் அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. புதிய பரிவர்த்தனைகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது இன்று மதியம் 12 மணிக்குப் பிறகு...

செம்மறி ஆடுகளை வாகனத்தில் விசித்திரமாக கொண்டு சென்ற ஆஸ்திரேலிய விவசாயி

ஆஸ்திரேலிய விவசாயி ஒருவர் தனது வாகனத்தின் முன்பக்கத்தில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம், Eyre...

செங்கடல் பகுதியில் இணைய கேபிள்கள் துண்டிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் (7) இணைய சேவை பாதிக்கப்பட்டதாக...

செம்மறி ஆடுகளை வாகனத்தில் விசித்திரமாக கொண்டு சென்ற ஆஸ்திரேலிய விவசாயி

ஆஸ்திரேலிய விவசாயி ஒருவர் தனது வாகனத்தின் முன்பக்கத்தில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைக் காட்டும் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம், Eyre...

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை அடர்த்தியான மாநிலத்தில் எண் தகடுகளில் புதிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றில், லட்சக்கணக்கான ஓட்டுநர்களுக்கு ஒரு பெரிய வாகன எண் தகடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார் விபத்துகளுக்கு அவசர சேவைகள்...