அவுஸ்திரேலியர்களில் மூவரில் ஒருவர் அண்மையில் வரி மோசடிக்கு பலியாகியுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2023-2024 நிதியாண்டு முடிவடைந்த நிலையில், மோசடியா என்று கூட அடையாளம் காண முடியாத வகையில் வரி மோசடிகள் நடப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவதானமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காமன்வெல்த் வங்கியினால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கணக்கெடுப்பில் பங்கேற்ற வயது வந்த பத்து பேரில் ஒன்பது பேர், தங்களுக்கு வந்த போலி குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் அந்த செய்திகளுக்கு உண்மை என்று பதிலளித்துள்ளனர்.
இந்த மோசடி செய்திகள் குறுஞ்செய்தியாகவும், அரசு நிறுவனங்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்களாகவும் கிடைத்துள்ளமையும் அவர்கள் ஏமாற்றப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
மத்திய அரசு மேலும் ஆஸ்திரேலியர்களுக்குப் பதிலளிப்பதற்கு முன் பணம் செலுத்துதல் தொடர்பான செய்திகளின் நம்பகத்தன்மையைப் படித்து சரிபார்க்கவும், நம்பகத்தன்மை இல்லை என்றால் அதை நிராகரிக்கவும் அறிவுறுத்துகிறது.