இந்தியாவில் இருத்து விசா இல்லாமல் 60 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்

0
407

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலக நாடுகளுக்கான இந்த வருடத்திற்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் அந்த நாட்டிற்குச் சென்ற பின்னர் விசா எடுக்கலாம் என்ற அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவிற்கு 87வது இடம் கிடைத்துள்ளது.

மொத்தம் 199 நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசையில் முதல் இடத்தை ஜப்பான் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் படி இந்த இரு நாட்டு பாஸ்போர்ட் கொண்டு 192 நாடுகளுக்குச் செல்லலாம்.

தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், முக்கிய நாடுகளான அமெரிக்கா 7வது இடத்திலும், ரஷ்யா 50வது இடத்தையும், சீனா 69வது இடத்திலும் உள்ளது. மேலும் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இந்தியாவிலிருந்து விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியல்:

ஓசியானியா நாடுகள்:

  1. குக் தீவுகள்
  2. பிஜி
  3. மார்ஷல் தீவுகள்
  4. மைக்ரோனேசியா
  5. நியு
  6. பலாவ் தீவுகள்
  7. சமோவா
  8. துவாலு
  9. வனுவாடு

மத்திய கிழக்கு பகுதி:

  1. ஈரான்

11.ஜோர்டான்

  1. ஓமன்
  2. கத்தார்

ஐரோப்பியா:

  1. அல்பேனியா
  2. செர்பியா

கரீபியன் பகுதி:

  1. பார்படாஸ்
  2. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
  3. டொமினிகா
  4. கிரெனடா
  5. ஹைதி
  6. ஜமைக்கா
  7. மாண்ட்செராட்
  8. புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ்
  9. புனித லூசியா
  10. புனித வின்சென்ட்
  11. டிரினிடாட் மற்றும் டொபாகோ

ஆசியா:

  1. பூட்டான்
  2. கம்போடியா
  3. இந்தோனேசியா
  4. லாவோஸ்
  5. மக்காவ்
  6. மாலத்தீவுகள்
  7. மியான்மர்
  8. நேபாளம்
  9. இலங்கை
  10. தாய்லாந்து
  11. திமோர்-லெஸ்டே

அமெரிக்கா:

  1. பொலிவியா
  2. எல் சல்வடோர்

ஆப்பிரிக்கா:

  1. போட்ஸ்வானா
  2. புருண்டி
  3. கேப் வெர்டே தீவுகள்
  4. கொமோரோ தீவுகள்
  5. எத்தியோப்பியா
  6. காபோன்
  7. கினியா-பிசாவ்
  8. மடகாஸ்கர்
  9. மொரிட்டானியா
  10. மொரீஷியஸ்
  11. மொசாம்பிக்
  12. ருவாண்டா
  13. செனகல்
  14. சீஷெல்ஸ்
  15. சியரா லியோன்
  16. சோமாலியா
  17. தான்சானியா
  18. டோகோ
  19. துனிசியா
  20. உகாண்டா
  21. ஜிம்பாப்வே
Previous articleஅஜித்தை எதிர்பார்த்து சமயபுரம் கோவிலில் திரண்ட ரசிகர்கள்… இன்ப அதிர்ச்சி கொடுத்த இளம் நடிகை
Next articleஇலங்கையில் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்படுகிறது