தெற்கு ஆஸ்திரேலியாவில், ரயில் மற்றும் டிராம் சிக்னல்களுக்குக் கீழ்ப்படியாமல், கவனக்குறைவாக செயல்படும் நபர்களுக்கு $658 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் மற்றும் டிராம் விபத்துக்களை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களையும், ஓட்டுநர்களையும் பாதுகாக்கும் வகையில், போக்குவரத்து வலையமைப்பில் பொது பாதுகாப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதுடன், ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில பயணிகளின் கவனக்குறைவான செயற்பாடுகளினால் புகையிரத ஊழியர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக புகையிரத சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு, தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில்வேயில் மக்களின் பாதுகாப்பற்ற நடத்தை தொடர்பான 123 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சுமார் 140 தொன் எடையுள்ள சாதாரண பயணிகள் ரயிலை அவசர காலத்தில் நிறுத்துவதற்கு சுமார் 470 மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் உடனடியாக நிறுத்த முடியாது எனவும் சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.





