Newsகணவனால் உயிரிழந்த இலங்கைத் தாய் - நீதிமன்றத்தில் மகன் வாக்குமூலம்

கணவனால் உயிரிழந்த இலங்கைத் தாய் – நீதிமன்றத்தில் மகன் வாக்குமூலம்

-

மெல்பேர்ன், Sandhurst பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் இன்று நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

ஆத்திரத்தில் தந்தை தாயை தாக்கியபோது உதவி கேட்டு அலறியடித்து ஓடியதாகவும், தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் 19 வயது மகன் தினுஷ் குரேரா, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் ஜூரிக்கு சாட்சியமளித்துள்ளார்.

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய குறித்த இளைஞன் இன்று 14 ஜூரிகளுக்கு காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் பெண்ணை கோடரியால் தாக்கி அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும் முயற்சியை தடுத்ததையும் மகன் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 47 வயதான சந்தேக நபர், தனது மனைவி நெலோமி பெரேராவை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளதுடன், தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தற்காப்புக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பான பல குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், தான் மகனைத் தாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

குரேராவின் மகன் வீடியோ மூலம் கொலையை விவரித்ததை தினுஷ் உணர்ச்சியின்றி பார்த்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...