Breaking Newsரணில் முன் வந்திருக்கும் சவால்..!

ரணில் முன் வந்திருக்கும் சவால்..!

-

சீனாவின் உளவுக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அடுத்த மாதம் வருகிறது.

சீன இராணுவத்தின் ‘யுவான் வாங்க் – 5’ என்ற உளவு போர்க் கப்பல், அம்பாந்தோட்டைக்கு ஒகஸ்ட் 11ல் வருகிறது. ஒகஸ்ட் , 17 வரை முகாமிடும் இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சீன கப்பலின் நோக்கம் தொடர்பான தகவல்கள் இந்தியாவால் சேகரிக்கப்படுவதுடன், அதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் இராஜதந்திர மட்டத்தில் விவாதம் நடந்துள்ளது.

சீன கப்பலில் இருந்து, 750 கி.மீ., பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை வேவு பார்க்க முடியும் என்று இந்தியா அஞ்சுகிறது..

அதுபோல, கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள ஆறு முக்கிய துறைமுகங்களையும் சீன கப்பல் உளவு பார்க்கலாமென்பதால் இந்திய பாதுகாப்புத்துறை கடும் விசனமடைந்துள்ளது.

இங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில், வேறு எந்த நாடுகளும் உதவ முன்வராத நிலையில், இந்திய அரசு பெரிய அளவில் கடன் வழங்கியும், பொருட்களை அனுப்பியும் உதவியுள்ளது.ஆனால் சீனாவின் கப்பலை தடுக்க இந்தியாவால் முடியவில்லை..

சீனாவின் கப்பலை தடுத்து நிறுத்துவதா அல்லது அதற்கு அனுமதியளித்து இந்தியாவின் எதிர்ப்பினை சம்பாதிப்பதா என்பது ரணிலின் கைகளில் இருக்கிறது.

ஆனால் , ஜனாதிபதிக்கான தெரிவில் தனக்கு ஆதரவளிக்க வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இந்தியா கேட்டுக்கொண்டதை மனதில் வைத்திருக்கும் ரணில் , அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதனை கையாள்வாரா அல்லது ‘இதற்கு முன் இருந்த ராஜபக்சக்கள் தான் இதனை அனுமதித்தார்கள் . என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது’ என்று கையை விரித்துவிடுவாரோ தெரியவில்லை..

ஆனால் என் சிற்றறிவில் சில விடயங்களை சொல்கிறேன்..

  • இனி இப்போதைக்கு இலங்கைக்கு இந்தியா உதவிகளை செய்யாது..
  • இலங்கை மேலும் பல அரசியல் , பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கப் போகிறது..

ரணிலுக்கு இனித்தான் சத்தியசோதனை ஆரம்பம்..!

நன்றி – சிவராமசாமி

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...