Newsகோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல - சர்வதேச ஊடகத்திடம்...

கோட்டாபய நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல – சர்வதேச ஊடகத்திடம் கூறிய ரணில்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது திரும்பினால், அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்கான உகந்த நேரம் இதுவென தாம் நம்பவில்லை என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு நேற்று அளித்த செவ்வியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் ஏற்கனவே அடிமட்டத்தை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியைக் காண்கிறேன்.

நாம் முடிந்தளவு விரைவாக அதை அடைய முயற்சிக்கிறோம்” என்றும் ரணில் தெரிவித்துள்ளார். இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியது.

அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு மற்றைய மூலங்களிலிருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டும்.

அதேநேரம் இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

அமெரிக்காவின் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். ஜிம்மி கார்ட்டர் அறக்கட்டளை சில காலமாக உடல்நிலை சரியில்லாமல்...

ஆஸ்திரேலியாவில் டிசம்பரில் அதிகரித்துள்ள இறப்பு எண்ணிக்கை

பண்டிகைக் காலங்களில் ஆஸ்திரேலியாவின் கடற்கரைகளிலும் நீச்சல் இடங்களிலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வார இறுதியில் மட்டும் ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக...

சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்களுக்கு கடுமையாகும் தண்டனை!

நாடு முழுவதும் புத்தாண்டைக் கொண்டாட சட்ட விரோதமாக பட்டாசு வெடிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலியர்களுக்கு மத்திய காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தை...

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ஒரு ரயில் அறிமுகம்

மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயங்கும் சமீபத்திய சீன CR450 புல்லட் ரயிலின் முன்மாதிரி நேற்று பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. CR450 ரயில் சோதனைகளின் போது மணிக்கு 450...

மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ஒரு ரயில் அறிமுகம்

மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயங்கும் சமீபத்திய சீன CR450 புல்லட் ரயிலின் முன்மாதிரி நேற்று பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. CR450 ரயில் சோதனைகளின் போது மணிக்கு 450...

மகளை காப்பாற்ற சென்ற ஆசிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல கடற்கரை ஒன்றில் பெர்த் தம்பதியொன்று தமது மகளைக் காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிறிஸ்மஸ் விடுமுறையை வார இறுதியில்...