News24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

-

கர்நாடகாவில் பழைய என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார் (40). தாய், தந்தையர் யார் என்ற தெரியாத நிலையில், திருமணமும் ஆகாமல் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகன என்ஜின் ஒயிலை ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ்வதாகத் தெரிவிக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கருநிறத்தில் என்ஜின் ஆயிலை குடித்து வந்த குமாரை பலரும் சூழ்ந்துகொண்டு ஆச்சரியமாக பார்த்தனர்.

இதுகுறித்து குமாரிடம் விசாரித்ததில், கட்டிடத் தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக என்ஜின் ஒயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

கடந்த 24 ஆண்டுகளாக என்ஜின் ஒயில், அவ்வப்போது காகிதங்கள், டீ, கொபி ஆகியவற்றை குடிப்பதாகவும், நாளொன்றுக்கு 5 லீற்றர் வரை வாகன பழுது பார்க்கும் நிலையங்களில் பணமின்றி பழைய என்ஜின் ஒயில்களை வாங்கி குடிப்பதாகவும், இதனால் தனக்கு எவ்வித உடல் உபாதையும் இல்லை என்றார்.

ஐயப்ப பக்தி காரணமாக எப்பொழுதும் கருநிற ஆடைகள் அணிந்துக்கொள்வதாகக் கூறும் இவர், கோயிலுக்கு சென்று திரும்பியபோது ரயில் டிக்கெட் இல்லாமல் ஒசூரில் இறக்கிவிட்டதாகவும், சித்ரதுர்கா செல்ல பணமில்லாமல் பலரிடம் கேட்டு ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உணவாக பழைய என்ஜின் ஒயிலை குடிக்கும் நபரை பலரும் ஆச்சரியமாகவும், திகிலோடு பார்த்துச் செல்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...