மெல்பேர்ணின் டான்டெனாங் பகுதியில் உள்ள வீட்டில் நாய்கள் தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த போலீசார் நாய்களிடம் இருந்து பெண்களை காக்க capsicum spray-ஐ பயன்படுத்தியதாகவும், ஆனால் அது தவறியதால் நாய்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் டான்டெனாங்கில் உள்ள இந்த வீட்டிற்கு பின்புறத்தில் ஒரு பெண்ணை மூன்று நாய்கள் கடித்து குதறுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது, அந்த பெண்ணிடம் இருந்து நாய்களை அகற்ற capsicum spray பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது பலனளிக்காததால் விலங்குகளை சுட வேண்டியிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





