Newsஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் - விசாரணையில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் 7ஆம் திகதி இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி பொலிஸார் தவித்து வந்தனர்.

அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயற்சித்தனர். இரு மாதங்களுக்கு மேலாக அந்தச் சகோதரிகள் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்களின் மரணத்தில் சிறிய துப்பு ஒன்று பொலிஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.

புதுமைப் பாலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அந்தச் சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் நடந்த புதுமைப் பாலினத்தவர் நிகழ்வில் கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

பொலிஸாரிடம் அந்தப் பெண் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தயக்கம் இருந்தது. நான் அவர்களிடம் சென்று பேசியபோது அவர்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சவுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னிடம் கூறினார்கள். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் ஒரு வார்த்தையில்தான் பதிலளித்தார்கள். அவர்கள் சிட்னி வந்த பிறகுதான் சுதந்திரத்தை உணர்வதாக தெரிவித்தார்கள். சிட்னியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்கள். அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.

தங்களது பாலினம் சார்ந்த அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்கள் தாய்நாடான சவுதியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியுள்ளனர். இந்தச் சூழலில் தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தங்களை மாய்த்துக் கொண்டனரா என்ற கோணத்திலும் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தச் சகோதரிகளின் மரணம் குறித்து சவுதி மனித உரிமை ஆணையம் கூறும்போது, “குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சவுதி பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

Latest news

உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலக புள்ளியியல் இணையதளம் குறிப்பிடும் உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது. அந்த தரவரிசையின்படி ஆஸ்திரேலியா 19வது இடத்தை பிடித்துள்ளது. 160 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த...

ஏலத்தில் 6.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனையான சுவரில் ஒட்டப்பட்ட ஒற்றை ‘வாழைப்பழம்’

அமெரிக்காவின் நியூயோர்க் ஏல மையத்தில் சுவற்றில் டேப் போட்டு ஒட்டப்பட்ட இந்த வாழைப்பழம் கடந்த புதன்கிழமை ஏலத்திற்கு வந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ...

விக்டோரியாவில் நடந்த மாபெரும் திருவிழாவில் நடத்தப்பட்ட Pill Testing

"Beyond The Valley" திருவிழாவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முதன்முறையாக மாத்திரை பரிசோதனை முறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி...

சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் Australia Post

தபால் விநியோக சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க Australia Post முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து கடித விநியோக கட்டணத்தை 50 காசுகள் வரை...

ஆஸ்திரேலியர்களை அதிகம் கொல்லும் நோய்கள் – வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்களை அதிகம் கொல்லும் நோய்கள் குறித்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் பெரும்பாலானோர் இதய நோயால் இறக்கின்றனர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் துறை அறிக்கைகள்...

28 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கர விமான விபத்து

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மூன்று எத்தியோப்பியர்களால் ஒரு விமானம் கடத்தப்பட்டு நவம்பர் 23ம் திகதியுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. நவம்பர் 23, 1996 இல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்...