ஸ்பெயினில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.
இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 1200 மீட்பு அதிகாரிகள் ஏற்கனவே ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
10,000க்கும் மேற்பட்ட நிவாரணப் பிரிவுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்துள்ளதோடு , தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், வளர்ந்த ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், வெள்ளம் ஏற்படும் முன், அதுகுறித்து மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்காதது கவலையளிக்கிறது.
கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கீடுகள் தொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.