அவுஸ்திரேலியாவின் வானிலை அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவும் தென் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு குயின்ஸ்லாந்தில் இன்று வெப்பநிலை ஓரளவு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் Pilibara பகுதியில் உள்ள Telfer பகுதியில் இன்று காலை வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளதாகவும், நவம்பர் மாத சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கை 8 டிகிரி அதிகமாக இருப்பதாகவும் Weatherzone இணையதளம் தெரிவித்துள்ளது.
குயின்ஸ்லாந்தின் Richmond, Mount Isa, Longrech மற்றும் Boulia போன்ற சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள வெலிங்டன் மலையை சுற்றி இன்று காலை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாலை வரை வடக்கு மண்டலம் மற்றும் குயின்ஸ்லாந்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலைகள் (Heatwawes) ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (BoM) எச்சரித்துள்ளது.
இருப்பினும், நியூ சவுத் வேல்ஸின் தென்கிழக்கு பகுதிகள், கான்பெரா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளில் இரவில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





