உக்ரைன் போரின் போது ஆஸ்திரேலியா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், கடும் நிதி இழப்பை சந்தித்ததாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மீது ரஷ்ய இரும்பு தொழிலதிபர் அலெக்சாண்டர் அப்ரமோவ் என்ற ரஷ்ய கோடீஸ்வரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் காரணமாக ஏப்ரல் மாதம் ரஷ்யாவை சேர்ந்த 67 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்தது.
இதனால் தங்கள் நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மீது அலெக்சாண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தங்கள் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட வேண்டும் என அவர் கோர்ட்டில் கேட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை போல் வேறு எந்த நாடும் இது போன்ற தடையை விதிக்கவில்லை என்றும் அலெக்சாண்டர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
அலெக்சாண்டர், ரஷ்யாவின் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியா விதித்துள்ள பொருளாதார தடை அலெக்சாண்டரின் நிறுவனம், நியூசிலாந்து உடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை பெரிதும் பாதிப்பதாக உள்ளதாக உள்ளதால், அமைச்சர் பென்னி எடுத்த முடிவு தவறானது என அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.