NewsDonald Trump உடன் மெட்டா நிறுவனர் Zuckerberg சந்திப்பு

Donald Trump உடன் மெட்டா நிறுவனர் Zuckerberg சந்திப்பு

-

அமெரிக்காவில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிரம்ப் தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறுவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழிலதிபர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, ட்ரம்ப் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பை சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவின் குடிநீரில் கார்சினோஜென்ஸ் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் குடிநீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புற்றுநோய்க் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரிஸ்பேனின் குடிநீர் பிடிப்பு பகுதிகளில் புற்றுநோயாக கருதப்படும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்...

மாற்றப்பட்ட ஆஸ்திரேலியா மாணவர் விசா விதிகளை விமர்சித்துள்ள இந்தியா

ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் 125 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது. அதிகரித்துள்ள விசா கட்டணத்தால் இந்திய மாணவர்களின் சர்வதேச கல்வி கனவுகள் பொய்த்துவிட்டதாக...

விக்டோரியாவில் விரிவடையும் அவசர சிகிச்சை சேவைகள்

விக்டோரியா மாநில அரசு, விக்டோரியா மக்களுக்கு மிகவும் திறமையான சேவையை வழங்கும் நோக்கத்துடன் அவசர சிகிச்சை சுகாதார சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அவசர காலங்களில் வைத்தியரை...

சரியான தூக்கம் இல்லாதவர்களை தாக்கும் நோய்கள் பற்றி புதிய கண்டுபிடிப்பு

சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கனடாவில் உள்ள ஒட்டாவா...

மெல்பேர்ணில் மலிவு விலையில் வீடுகள் வாங்கக்கூடிய பகுதிகள் பற்றிய சமீபத்திய அறிக்கை

2024 ஆம் ஆண்டில் மெல்பேர்ணில் மிகவும் மலிவு விலையில் வீடுகள் உள்ள பகுதிகள் தொடர்பான புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. PRD ரியல் எஸ்டேட்ஸின் கூற்றுப்படி, இந்த ஆண்டு...

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் பலத்த மழை மற்றும் புயல் எச்சரிக்கை

இந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி ஏற்படும் அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, குயின்ஸ்லாந்து, நியூ...