News40 வருடத்தில் 12 முறை விவாகரத்து - $342,000 மோசடியில் ஈடுபட்ட...

40 வருடத்தில் 12 முறை விவாகரத்து – $342,000 மோசடியில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய தம்பதி

-

அவுஸ்திரேலிய தம்பதியினர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்து மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியத்தில் இருந்த அட்டையைப் பயன்படுத்தி, போலி திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள் மூலம் லட்சக்கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளனர்.

தற்போது 73 வயது கொண்ட மூதாட்டி, 1981 இல் தனது முதல் கணவர் இறந்த பிறகு விதவை பென்ஷன் பெற தொடங்கியதில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

பொதுவாக மறுமணம் செய்துகொண்டால் விதவை பென்ஷன் பொதுவாக நிறுத்தப்படும் என்றாலும், அடுத்தடுத்த திருமணங்களின் போது ஒரு முறை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை மூதாட்டி அப்போது தெரிந்து கொண்டு மோசடியில் இறங்கியுள்ளார்.

வேறொரு நபரை திருமணம் செய்து கொண்ட அவர், 1988ம் ஆண்டு முதல் அந்த நபருடன் சேர்ந்து ஒருவரையொருவர் திருமணம் செய்தும் விவாகரத்து செய்தும் ஒரு மோசடி சுழற்சியைத் தொடங்கியுள்ளார்.

இவ்வாறு 43 ஆண்டுகளில் பன்னிரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து விவாகரத்து செய்தும் மோசடியில் அந்த தம்பதியினர் இறங்கியுள்ளனர்.

இவர்களின் ஒவ்வொரு திருமணமும் சுமார் மூன்று ஆண்டுகள் நீடித்தது, பின்னர் கணவரின் வேலை நிமித்தமான அடிக்கடி வெளியூர் பயணங்களை காரணம் காட்டி விவாகரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்களின் விதவைப் பென்ஷன் தொகை மீண்டும் மீண்டும் பெற்று $342,000 க்கும் அதிகமான இழப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களது திருமண வரலாற்றின் தொடர்ச்சியான தன்மையைப் பார்த்து ஓய்வூதிய அதிகாரிகள் சந்தேகம் அடைந்த போது அவர்களின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

மே 2022 இல் அவர்களின் சமீபத்திய “விவாகரத்துக்குப்” பிறகு, ஓய்வூதிய நிதி பெண்ணின் பலன்களை மீண்டும் வழங்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தம்பதிக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன் ஒரே நபரை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்வதும் துஷ்பிரயோகம் என்று தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...