2030ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கால்பந்துத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் மொராக்கோ அரசு, 30 இலட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது.
இது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FIFA 2030 உலகக் கிண்ண கால்பந்து தொடரை மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. கால்பந்துத் தொடரைப் பிரம்மாண்டமாக நடத்தி பெயர் எடுப்பதற்கு மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அந்த நாடு எடுத்து வரும் நடவடிக்கை, உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆபிரிக்க நாடான மொராக்கோவில் தெரு நாய்கள் அதிகம்.
கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களை தெருநாய்கள் கடித்து குதறினால் தமக்கு அவப்பெயர் வரும் என்று கருதிய அந்நாட்டு அரசு, மொத்தமாக அனைத்துத் தெருநாய்களையும் கொல்ல முடிவு செய்துள்ளது. உத்தேசமாக 30 இலட்சம் தெருநாய்களைக் கொல்ல வேண்டியிருக்கும் என்றும் அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது.