கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா வழங்குவது சாதனை அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பரில் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 17,000 என உள்நாட்டலுவல்கள் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அதில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
2023 இல் ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் (746,000) வெளிநாட்டு மாணவர்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதில் சீனா, இந்தியா மற்றும் நேபாளம் முன்னணியில் உள்ளன.
இந்த மாணவர் வீசா முறையின் மூலம் தெற்காசியாவில் சில நாடுகளில் உள்ள மாணவர்கள் கல்வியை விட வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது கவலைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சர், சர்வதேச மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை தொடர்ந்து நிர்வகிப்பதாக தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் சர்வதேச ஆட்சேர்ப்புகளை குறைக்கும் நோக்கத்துடன், அந்த நாட்டின் அரசாங்கம் இந்த ஆண்டு விசா கட்டணத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான நிதி தேவைகளை உயர்த்துதல் போன்ற கொள்கைகளை செயல்படுத்த சமீபத்தில் முடிவு செய்தது.





