Newsசீன கப்பல் விவகாரம்?

சீன கப்பல் விவகாரம்?

-

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக வரவுள்ளது. இதனை இந்தியாவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை – ஏனென்றால், இந்தியாவிற்கு முதுகெலும்பில்லை என்றவாறான, தமிழ் குரல்களை காண முடிகின்றது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் முதுகெலும்மை தேடும் அரசியல் (நமது) ஆய்வாளர்கள் என்போரின் பரிதாப நிலையை என்னவென்பது?

முதுகெலும்பு என்னும் கதையாடல்கள் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். ராஜதந்திர விடயங்களில் முதுகெலும்பு என்று ஒன்றில்லை. தந்திரம் மட்டுமே அங்குண்டு. அண்மையில் அமெரிக்க சபாநாயகர், திட்டமிட்டவாறு, தாய்வானுக்கு சென்று, அங்கு சந்திப்புக்களில் ஈடுபட்டார். தாய்வானை தன்னுடைய பகுதியென்று சத்தமிட்டுவரும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் சீனாவிற்கு முதுகெலும்பில்லை எனலாமா? மற்றவர்களின் முதுகெலும்மை தேடுவதைவிட்டுவிட்டு, நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் – ஏன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது, என்று சிந்திப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்துதான் குறித்த கப்பல் குறித்த திகதியில் துறைமுகத்திற்கு வரவில்லை. கடந்த 11ம் திகதி இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பிற்போடுமாறு, கொழுப்பு, சீனாவை அறிவுறுத்தியிருந்தது. குறித்த கப்பலுக்கு முன் கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை தடுப்பது கொழும்பிற்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆனாலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையுணர்வின் அடிப்படையில் புதுடில்லி சில விடயங்களை வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் தலையீடு செய்வதும் சாதாரணமானது. ஆனால் தலையிடுவதற்கான எல்லைக் கோடானது, நமது சில தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று இருக்காது. ஏனெனில் இது யுத்தமல்ல. ஒரு அமைதியான சூழலில் இடம்பெறும் இது போன்ற விடயங்களை ராஜதந்திர ரீதியில்தான் அணுக முடியும். மேலும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களை பொறுத்தவரையில், அவர்கள் அதிகம் இந்தியாவிற்கும் இலங்கைத் தீவுக்குமான புவியியல்-அருகாமை (Geographic proximity) தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரியளவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால், எவ்வேளையிலும் இலங்கைத் தீவை தங்களின் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரமுடியும் – என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அதிகம் பதட்டமடையாமல் இருக்கின்றனர். நான் ஒரு முறை, இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கொமடோர் வாசனை நேர்காணல் செய்திருந்தேன்.

அவர் கூறியது, இராணுவ நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள அமைவிட அனுகூலங்களே இதற்கான காரணமாகும். இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கின்ற சகல ஏவுகணைகளும் தாக்கக் கூடிய தொலைவிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கின்றது. இந்த நேர்காணலை எமது சிந்தனைக் கூட தளத்தில் நீங்கள் காணலாம்.

Latest news

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக காலியிட விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

திவால்நிலைக்கு தள்ளப்பட்ட XL Express நிறுவனம் – 200 பேர் வேலையிழக்கும் நிலை

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி தேசிய போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுவனமான XL Express கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் சுமார் 42 மில்லியன்...

மெல்பேர்ண் மருத்துவமனையில் மின் தடை – முடங்கிய செயல்பாடுகள்

மெல்பேர்ண் Alfred மருத்துவமனையில் புதன்கிழமை பிற்பகல் அறுவை சிகிச்சையின் போது மூன்று அறுவை சிகிச்சை அறைகளில் தற்காலிக மின்சாரம் தடைப்பட்டது. ஜெனரேட்டர்கள் இயங்க வேண்டியிருந்தாலும் அவை செயலிழந்துவிட்டதால்,...

Coonawarra-இற்கு மீண்டும் திரும்பும் Brandy உற்பத்தி

தெற்கு ஆஸ்திரேலியாவின் Coonawarra Limestone Coast-இல் பிராந்தி உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் பகுதியில் முன்னணி வயின் நிறுவனமான Majella Wines, பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்தப்...