Newsபுலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

புலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

-

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜுலை 18ஆம் திகதி முதல், எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவசரகால சட்டம் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கு, மனித உரிமைகள் ஆர்வலர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

எவ்வாறிருப்பினும், கடந்த மாதம் 27ஆம் திகதி அவசரகால சட்டம் நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை இந்தவார இறுதிக்குள் நீக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம்மட்ட ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், அந்த உடன்படிக்கை இலங்கைக்கு சிறந்த நம்பிக்கையைக் கொடுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Latest news

பொங்கல் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர், மாண்புமிகு Julian Hill M.P பொங்கல் கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். https://youtu.be/R-SETccCJs0

அதிக எரிசக்தி செலவுகளுக்கு எதிராக புதிய திட்டம் – எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், அதிக எரிசக்திச் செலவுகளுக்கு எதிராகப் போராடுவேன் என்று நம்புவதாகக் கூறியுள்ளார். தேர்தலுக்கு முந்தைய உரையின் போது இந்த திட்டத்தை வழங்கியுள்ளார். அதிக எரிசக்தி...

விக்டோரியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வணிகம் பற்றிய சமீபத்திய அறிக்கை

புள்ளியியல் பணியக தரவுகளின்படி, விக்டோரியா மாநிலம் 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வேகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. கடந்த தசாப்தத்தில், விக்டோரியா ஆஸ்திரேலியாவின் வலுவான பொருளாதாரம்...

AI குறித்து அச்சத்தில் உள்ள இளம் ஆஸ்திரேலியர்கள்

அவுஸ்திரேலியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்தில் தொழில் சந்தையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து இளைஞர் சமூகத்தினரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இளைய...

AI குறித்து அச்சத்தில் உள்ள இளம் ஆஸ்திரேலியர்கள்

அவுஸ்திரேலியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்தில் தொழில் சந்தையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து இளைஞர் சமூகத்தினரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இளைய...

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு மையங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. சிலர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019 ஆம்...