Newsமலையாள சினிமா சூப்பர் ஸ்டார் இலங்கை வருகை - சனத் ஜயசூரியவுடன்...

மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் இலங்கை வருகை – சனத் ஜயசூரியவுடன் சந்திப்பு

-

இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அந்நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக
நேற்று மாலை இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் வரவேற்றார்.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி கலந்து கொண்டார்.

இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கையின் சுற்றுலாத் தூதுவருமான சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சனத் ஜெயசூர்யா, ”மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்தது பெருமையாக இருந்தது. நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி.

அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை பார்க்க அழைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவை கடுமையாக தாக்கிய புயல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் நேற்று இரவு ஒரு சூறாவளி வகை 4 அமைப்பாக தீவிரமடைந்தது. கடுமையான வெப்பமண்டல சூறாவளி எரோல் இன்று காலை ப்ரூமிலிருந்து வடமேற்கே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள தங்க உற்பத்தி

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா இன்னும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...