Newsஇலங்கைக்கு எரிபொருள் வழங்கி உதவும் ஆஸ்திரேலியா!

இலங்கைக்கு எரிபொருள் வழங்கி உதவும் ஆஸ்திரேலியா!

-

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

உயர்ஸ்தானிகராலயம், இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆஸ்திரேலியா மகிழ்ச்சியடைகிறது என்றும் இது நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான நமது நீண்டகால ஒத்துழைப்பு தொடர உதவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளான, மூன்று நாடுகளும் பிராந்திய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன என்று அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆஸ்திரேலியாவை அடைய விரும்பும் பல இலங்கையர்களுடன் மனித கடத்தலை எதிர்த்து இலங்கையும் ஆஸ்திரேலியாவும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Latest news

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் புதிய விதிகள்

இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் செல்லும் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தோனேசியாவிற்கு வருகை...

ஆசிய உணவகங்களின் மீன் வடிவ பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணங்களில் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய உத்தரவில்,...

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பேரணி

இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில், கல்வி மற்றும் வேலைக்காக 10 லட்சம் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ள Ski season

மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக Skiing சீசன் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட உள்ளது. Snowy மலைகளின் சில பகுதிகளில் பனி அளவு இரண்டு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக...

உலகின் முதல் 6G சிப்பை தயாரித்தது சீனா

சீன ஆராய்ச்சியாளர்கள் குழு உலகின் முதல் 6G சிப்பை அறிமுகப்படுத்த முடிந்தது. தற்போதைய இணைய சேவையுடன் ஒப்பிடும்போது இது 5000 மடங்கு வேகத்தை அதிகரிக்க முடியும் என்று...