Newsஅடுத்த மாதம் பலாலியில் இருந்து ஏயார் இந்தியா வானூர்தி சேவை

அடுத்த மாதம் பலாலியில் இருந்து ஏயார் இந்தியா வானூர்தி சேவை

-

பலாலியில் உள்ள யாழ்ப்பாண அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கான வானூர்தி சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடக்க வாரத்திற்கு இரண்டு தடவை பலாலிக்கு வானூர்திகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

75-90 ஆசனங்கள் உள்ள வானூர்தி என விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வரும் பருவ காலமாக தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு வானூர்தி நிலையத்திற்கான அனைத்துலக வானூர்தி சேவைகள் ஜூலை 1 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று சிறிலங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 17, 2019 அன்று, சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் வானூர்தி பலாலி வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய முதல் வணிக அனைத்துலக வானூர்தி என்பது குறிப்பிடத்தக்கது என்று கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

காட்டுத்தீயின் போது பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Longwood மனித உடல்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் கடுமையான காட்டுத்தீ நிலைமை இப்போது ஒரு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. Longwood பகுதியில் பலத்த எரிந்த பகுதியில் ஒரு மனித...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுலா நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரங்கள் அதிக போக்குவரத்து நெரிசலால் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன. Dunsborough மற்றும் Busselton போன்ற நகரங்களில் உள்ள கடற்கரைகள்...

மீண்டும் மோசமடைந்து வரும் Bondi நாயகனின் உடல்நிலை

Bondi ஹீரோ அகமது அல்-அஹ்மத் அமெரிக்காவில் மீண்டும் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காகவும், பல கௌரவ விருது விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் நியூயார்க்கிற்குச்...

காவல்துறையினரைத் தாக்கியதற்காக இளைஞர் ஒருவர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Bawley கடற்கரையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்திய 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் நிர்வாணமாக...

காவல்துறையினரைத் தாக்கியதற்காக இளைஞர் ஒருவர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Bawley கடற்கரையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்திய 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞர் நிர்வாணமாக...

மெல்பேர்ண் மைதானத்தில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்த மரம்

மெல்பேர்ணில் உள்ள Gracedale பூங்காவில் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது குடும்பத்தினருடன் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மரம் முறிந்து விழுந்ததில் 90...