Newsஆஸ்திரேலியாவில் கோர விபத்து - இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் நிர்வாயிர் சிங் உயிரிழந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வடமேற்கே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் நிர்வாயிர் சிங் என்பவர் சிக்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு வெளியான அறிக்கையில், நிர்வாயிர் சிங் தவறான இடத்தில், தவறான நேரத்தில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார் என தெரிவித்துஉள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இசை தொழிலை சிங் தொடர்ந்து வந்துள்ளார். அவரது மை டர்ன் என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற தேரே பீனா என்ற பாடல் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்த பாடல்களில் ஒன்று.

இந்த விபத்தில் சிக்கிய 3-வது காரில் இருந்தவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் இருந்து வல்லான் பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் சன்பர்ரி பகுதியை சேர்ந்த பெண் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Latest news

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

விக்டோரியாவின் மலை ஏறும் தடை இன்னும் நீக்கப்படவில்லை – அரசாங்கம்

விக்டோரியாவில் பாறை ஏறுதலுக்கான தடை நீக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Grampians (Gariwerd) மற்றும் Mount Arapiles (Dyurrite) பகுதிகளில் ஏற்கனவே உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட...