Cinemaதனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான 'நானே வருவேன்' முதல் பாடல்

தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான ‘நானே வருவேன்’ முதல் பாடல்

-

நானே வருவேன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சுமார் 3.30 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த பாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் வெளிவந்துள்ள பாடல் இது. அதனால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ரகம். அதனால் எதிர்பார்ப்பு இந்த கூட்டணிக்கு நானே வருவேன் படத்தில் எகிறி இருந்தது.

அதன்படி தற்போது ‘வீரா சூரா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை செல்வராகவன் எழுதி உள்ளார். யுவன் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

Latest news

டிரம்ப் பதவியேற்கும் முன் சர்வதேச மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ஜனவரி 20-ம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, சர்வதேச மாணவர்கள் தங்கள் வளாகங்களுக்குத் திரும்புமாறு சில பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன. பல அமெரிக்க...

இரண்டாவது நாளாகவும் சாதனை படைத்துவரும் MCG மைதானம்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு (MCG) இரண்டாவது நாளான Boxing Day டெஸ்ட் போட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அதன்படி முதல் நாளில் Boxing Day டெஸ்ட்...

ஓடும் ரயிலில் இருந்து குதித்த டிரைவர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஓடிக் கொண்டிருந்த அதிவேக ரயிலின் ஓட்டுநர்கள் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அப்போது ரயிலில் சுமார் 400 பயணிகள்...

Boxing Day தினத்தில் வெல்லப்பட்ட $12 மில்லியன் Powerball லாட்டரி

Boxing Day தினத்தன்று நடத்தப்பட்ட Powerball லாட்டரி டிராவின் முடிவுகளில் அனைவரின் பார்வையும் உள்ளது. இதன் மொத்த மதிப்பு 12 மில்லியன் டாலர்கள் ஆகும். அந்த டிராவில் இருந்து...

ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிட்னி

ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிட்னி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தரவரிசையின்படி, மெல்பேர்ண் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலக நகரங்களில் 88 சதவீதத்தை விட மெல்பேர்ணில் வாழ்க்கைச் செலவு அதிகம்...

விக்டோரியன் லிபரல் கட்சியின் புதிய தலைவராக Brad Battin

விக்டோரியா லிபரல் கட்சியின் புதிய தலைவராக Brad Battin இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் John Pesutto இந்தார். இன்றைய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோரின் நம்பிக்கையின் அடிப்படையில்...