Newsபெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் - ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

-

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக  ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா கூறியதாவது:

பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது. தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும்.

இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது. நோயின் முக்கியத்துவத்தை பொறுத்து, புற்றுநோய் கட்டியின் அளவு விரைவில் குறைவதுடன் குணமடையும் வேகமும் 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கும்.மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...