ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாராசிட்டமால் விற்பனை செய்வதை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.
பராசிட்டமால் மருந்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேசிய மருந்துகள் நிர்வாக ஆணையம் (டிஜிஏ) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்து சீட்டு இல்லாமல் பரசிட்டமோல் விற்பனை செய்யாமல் இருப்பது குறித்தும், ஒருவருக்கு வழங்கப்படும் பரசிட்டமோல் பொதிகளின் எண்ணிக்கையை 01 அல்லது 02 ஆக மட்டுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அதிக அளவு பாராசிட்டமால் உட்கொள்வதால் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
நாளாந்தம் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் இது குறித்து இறுதி முடிவை எடுக்க TGA தயாராக உள்ளது.