மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கிய பங்கு வகித்த முன்னாள் சகலதுறை வீரர், Bernard Julien தமது 75 ஆவது வயதில் காலமானார்.
Trinidad-இன் Valsene அவர் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1975 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்றபோது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான Julien முக்கியப் பங்களித்தார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 4/27 என்ற சிறப்பான பந்துவீச்சு பெறுதியையும் பதிவு செய்தார்.
அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அழுத்தமான சூழ்நிலையில் 26 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.