Newsசர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக்...

சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

-

அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.

தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப் பார்வை கொண்டவை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ஆங்கில நாவல்களின் மூலம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்துள்ள ஈழத் தமிழரான அனுக் அருட்பிரகாசம் ஆங்கில எழுத்தின் மூலம் உலகக் கவனத்தை ஈர்க்கும் இளைய சக்தியாக வளர்ந்து வருகிறார்.

எனது நண்பரும் ஜெர்மானிய எழுத்தாளருமான சாஸா ஸ்டானிசிக் போல தங்களது உள்நாட்டுப் போரைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளின் மூலம் இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
2016இல் வெளிவந்த இவரது The Story of a Brief Marriage எனும் ஆங்கில நாவல் பிரெஞ்சு, ஜெர்மன், செக், மாண்டரின் சீனம், டச்சு, இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நாவல் 2009இல் நிகழ்ந்த ஈழத்தின் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரை, மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”இது “ அப்பாவிகளுக்கும் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நாவல்” என்றும் “மனிதகுலத்தின் மாண்பின் முன்னால் மண்டியிட வைக்கிறது “ என்றும் The New York Times இதழால் பாராட்டப்பட்டது. ”2016இல் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்” என்று The Wall Street Journal, NPR, Financial Times. இதழ்களால் கணிக்கப்பட்டது.

இவரது இரண்டாவது நாவலான A Passage North (2021) என்பது ஈழத்தின் உள்நாட்டுப் போரின் வன்முறைகளைப் பேசும் ஒரு நாவல்.

இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் நியூயார்க், டொரொண்ட்டோ ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த அம்மாக்கள், மகள்கள் பற்றியதாக அமைகிறது.

Latest news

விக்டோரியாவில் மாணவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தனியார் பள்ளி மீது விசாரணை

மாணவர் துஷ்பிரயோகம் மற்றும் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விக்டோரியாவில் உள்ள தனியார் பள்ளியான Ballarat Grammar, பாதுகாப்பானது என நிரூபிக்கப்படும் வரை புதிய குடியிருப்பு மாணவர்களைச்...

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...