கனமழை மற்றும் வெள்ள நிலைமைகள் அடுத்த சில மணிநேரங்களில் விக்டோரியாவை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான வானிலையால் மெல்போர்ன் நகரின் பல இடங்களும், விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளும் அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Melba-Hume-Calder மற்றும் Marunda நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 80 முதல் 120 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று தஸ்மேனியா மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 300 மில்லிமீற்றர் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.