News ஜனனியின் நட்பு தான் வேண்டும் - GP முத்து கூறிய காரணம்

ஜனனியின் நட்பு தான் வேண்டும் – GP முத்து கூறிய காரணம்

-

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.

ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விவாதங்களும் தற்போது தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் விறுவிறுப்பாக இதனை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர் இடையே உரையாடல் தொடர்பான வீடியோ, தற்போது பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் முதல் ஜிபி முத்து செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரல் ரகங்கள் தான். தனியாக வீட்டில் இருந்த போது பயத்துடன் கமலிடம் பேசியது, மழையில் போட்ட ஆட்டம், நாய் சத்தம் கேட்டு பயந்தது என ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ட்ரெண்ட் ஆகத் தான் செய்கிறது.

அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சுற்றில், உங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் யாருடைய நட்பு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனியின் நட்பு தான் வேண்டும் என கூறினார். இதற்காக அவர் கூறிய காரணம் தான், தற்போது இந்தியாவை தாண்டி இலங்கை மக்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது.

“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இங்குள்ள எல்லோருக்கும் என்னை தெரியும். ஆனால், தங்கச்சி (ஜனனி) என்ன சொன்னார் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் கலந்து கொள்ள போவதால் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என ஜனனியிடம் சொல்லி உள்ளார்கள். இதனால், தங்கச்சியுடன் நட்பு மூலமா இலங்கை மக்களின் நட்பு இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்றைக்கும் நாம் பாசமாக இருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜனனி, “ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு உங்களை பிடிக்கும். இதனால் அதை பற்றி நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் நட்பு தொடர்பாக ஜிபி முத்து பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள மற்றுமொரு அதிகரிப்பு!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பியர் விலை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு நகரங்களின் பாடசாலைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அடிலெய்டு...

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான சாக்லேட் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற Mars-Snickers மற்றும் Milkyway சாக்லேட் உற்பத்தியாளரான Mars Wrigley, சாக்லேட் பொதியிடுவதற்கு உக்கும் காகிதத்தைப்...

ஆஸ்திரேலியாவில் 15,000 பணி வெற்றிடங்கள்

ஆஸ்திரேலியாவில் விருந்தோம்பல் துறையில் 15,000 பணி வெற்றிடங்களுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கும்...

ஆஸ்திரேலியாவில் 08 வருடங்களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு குறைவடைந்துள்ளது. 2014ஆம்...

600 இலங்கையர்களின் உயிரை பறித்த கட்டார் கால்பந்து உலகக் கோப்பை!

கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத்...