Newsஇலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

-

நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனைத் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தாம் வலியுறுத்தினார் என்று மனோ கணேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம். ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனுக்குத் தெரிவித்தேன்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள சிங்கள ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன். ஆகவே, இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கியுள்ளது. அதுவே மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி எனத் தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையகத் தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.” – எனவும் மனோ குறிப்பிட்டார்.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...