Newsதென் கொரியாவின் நடந்த பயங்கரம் - இலங்கையர் பலி

தென் கொரியாவின் நடந்த பயங்கரம் – இலங்கையர் பலி

-

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதர்.

ஹிஸ்மாயில் முனவ்ஃபர் என்ற ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் தென் கொரியாவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 23 ஆயிரம் இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் நிலை தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில், இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...