Newsவழுக்கி விழுந்து விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

-

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வேலுக்கு விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

8வது டி20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர்-12 சுற்றுடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் நண்பரின் பிறந்த நாள் பார்டிக்கு சென்று கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் அங்கு விளையாட்டாக ஓடி வரும்போது கால் வழுக்கி விழுந்துள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மேக்ஸ்வெல்லுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் தொடரில் மேக்ஸ்வெல் பங்கேற்க முடியாது. அவருக்கு பதிலாக ஷான் அப்பாட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் மேக்ஸ்வெல் பங்கேற்பது மாட்டார் என கூறப்படுகிறது.

Latest news

பயணியின் பொதியில் இருந்த முதலை தலை!

கனடா பிரஜை ஒருவரின் பயணப் பொதியில் 'முதலை மண்டை ஓடு' ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. குறித்த 32 வயதான கனேடியர் புதுடெல்லி விமான நிலையத்தில்...

ஓட்டுநர் சட்டங்களை கடுமையாக்கும் மத்திய அரசு

வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் சீட் பெல்ட்களை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவோம் என மத்திய அரசு...

காதல் ஆலோசனைக்காக இணையத்தை நாடும் ஆஸ்திரேலியர்கள்

இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் காதல் உறவுகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு இணைய ஆதாரங்களை நாடுவதற்கான போக்கு இருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 18-34 வயதுடைய 500 க்கும் மேற்பட்ட...

விக்டோரிய குடும்பங்கள் எந்த துறையில் அதிகம் செலவு செய்தனர்?

2024 ஆம் ஆண்டு முழுவதும் விக்டோரியன் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு செய்யும் துறைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின்...

மெல்பேர்ணில் ஆவிகளை வைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

மெல்பேர்ணில் அமானுஸ்யமான கதைகளை கூறி வயதான பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய குழுவினர் குறித்த தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. இந்த குழுவில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும்...

ஆஸ்திரேலியாவின் சைவ உணவு உண்பவர்கள் தொடர்பில் வெளியான அறிக்கை

உலக மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் சைவ உணவு உண்பவர்களின் நிகழ்தகவு குறித்த சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக புள்ளியியல் இணையதளம் இந்த ஆய்வை...