Breaking Newsசிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் - பாதியில் கைவிடப்பட்ட...

சிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் – பாதியில் கைவிடப்பட்ட பயணம்

-

சிட்னி வந்த தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாயின.

அதன் காரணமாக 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் 4,600 பயணிகளும் ஊழியர்களும் பயணம் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

3,300 பயணிகளைச் சோதித்ததில் சுமார் 800 பயணிகளுக்கும் சில ஊழியர்களுக்கும் கோவிட் நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நோய்த்தொற்று ஏற்பட்ட பயணிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன அல்லது அறவே அறிகுறிகள் இல்லை.

அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் கப்பலைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...