Newsஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களுக்கு நேர்ந்த கதி - 40...

ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களுக்கு நேர்ந்த கதி – 40 வருடங்களின் பின் சிக்கிய குற்றவாளி

-

ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு பொலிஸார் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் 1985 – 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால விசாரணையில், முதலில் பல்வேறு நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டது.

பின்னர் ஒருவழியாக டி.என்.ஏ சோதனை மூலம், இதைச் செய்தவர் கீத் சிம்ஸ் என்பது தெரியவந்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001-ம் ஆண்டு, 12 பாதிக்கப்பட்ட நபர்களின் டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒரே மாதிரியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மற்ற 19 சம்பவங்களையும் பொலிஸார் இதனுடன் இணைத்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 14 – 55 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த நபரைப்பற்றி, 160 – 180 செ.மீ உயரம் கொண்டவர், கருமையான நிறமுடையவர், பழுப்பு நிற கண்கள், அகன்ற மூக்கு கொண்டவர் என்று ஒத்த விளக்கங்களைக் கூறியிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் புலனாய்வாளர்கள், பொலிஸாரின் தரவுத்தளத்தில் இது தொடர்பான டி.என்.ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்தனர். இது சந்தேகத்துக்குரிய எண்ணிக்கையை 324 பேராகக் குறைத்தது. அதையடுத்து ஒருவழியாகக் கடந்த செப்டம்பரில், சிம்ஸிடமிருந்து ஏற்கெனவே இருந்து எடுக்கப்பட்டிருந்த டி.என்.ஏ மாதிரி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் சரியான பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது.

கீத் சிம்ஸ் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சிம்ஸ், மிகவும் விரும்பத்தகுந்த தந்தை, தாத்தா மற்றும் சமூக உறுப்பினர் என குடும்ப மற்றும் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

தனது 28 கிளைகள் மூடப்பட உள்ள ஆஸ்திரேலியாவின் பிரபலமான வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான Bendigo வங்கி, அதன் 28 கிளைகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிளை மாதிரி இனி பொருத்தமானதாக இல்லாததால்,...

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

71 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த WWE ஜாம்பவான்

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த வீரராகக் கருதப்பட்ட 71 வயதான Hulk Hogan வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது வர்த்தக முத்திரையான bandana, sunglasses...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...