Businessஇந்தியர்கள் ஆஸ்திரேலியா வந்து பணிபுரியலாம் - Work and Holiday விசா!

இந்தியர்கள் ஆஸ்திரேலியா வந்து பணிபுரியலாம் – Work and Holiday விசா!

-

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், “Work and Holiday” திட்டத்தில் இந்திய இளைஞர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இவ்வாண்டு கைச்சாத்திடப்பட்ட ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், டிசம்பர் 29ம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின்கீழ் இருநாடுகளுக்கும் பல நன்மைகள் ஏற்படவுள்ளநிலையில், இந்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆஸ்திரேலியாவின் “Work and Holiday” திட்டத்தில் இந்தியர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்கீழ் தொழில் மற்றும் கலாச்சார எல்லைகளை விரிவுபடுத்த விரும்பும் இந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியும்.

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்திய இளைஞர்களுக்கான “Work and Holiday” ஏற்பாட்டை ஆஸ்திரேலியா மேற்கொள்ளும்.

இதன்படி ஆண்டொன்றுக்கு சுமார் 1000 Work and Holiday (subclass 462) விசாக்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கும் எனவும், குறித்த விசா பிரிவின் கீழ் இங்கு வருபவர், சுமார் 12 மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரியமுடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் இந்திய இளைஞர்கள் இந்த விசாவைப் பெறுவதற்கு தகுதிபெறுவர்:

  1. செல்லுபடியாகும் நிலையிலுள்ள இந்திய கடவுச்சீட்டை வைத்திருக்கவேண்டும்;
  2. விசாவிற்கு விண்ணப்பிக்கும்போதும் அதைப் பெற்றுக்கொள்ளும்போதும் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே இருக்கவேண்டும்.
  3. இணையவழி விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவேண்டும்.
  4. விசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவேண்டும்.
  5. பன்னிரண்டு மாதங்கள் வரையான விடுமுறை காலப்பகுதியை ஆஸ்திரேலியாவில் கழிக்க உத்தேசித்திருக்க வேண்டும்.
  6. பதினெட்டு (18) வயதிலிருந்து 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
  7. அவரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுடன் வரமுடியாது.
  8. ஆஸ்திரேலியா வருவதற்கான விமானப் பயணச் சீட்டு, அல்லது அதனை வாங்க போதுமான நிதியை வைத்திருக்க வேண்டும்.
  9. ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க மற்றும்  ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான போதியளவு நிதியை வைத்திருத்தல்.
  10. ஆஸ்திரேலிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கேற்ப health & character நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல்.
  11. ஆஸ்திரேலியாவின் “Work and Holiday” அல்லது “Working Holiday” திட்டத்தில் இதற்கு முன்பு பங்கேற்றிருக்கக்கூடாது.
  12. குறைந்தது இரண்டு வருடங்கள் post-secondary நிலை படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.
  13. போதுமான ஆங்கிலப் புலமை இருக்க வேண்டும்.

Work and Holiday (subclass 462) விசா வைத்திருப்பவர்கள் பின்வருவனவற்றைச் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்:

  1. விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து பன்னிரெண்டு (12) மாதங்களுக்குள் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையலாம்.
  2. முதலாவது நுழைவு தேதியிலிருந்து பன்னிரண்டு (12) மாதங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க வேண்டும்.
  3. 12 மாதங்கள் தங்கியிருக்கும் காலத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பவரலாம்
  4. ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலம் முழுவதும், ஊதியம் பெறும் அல்லது ஊதியம் இல்லாத வேலையை மேற்கொள்ளலாம்.
  5. நான்கு மாதங்கள் (17 வாரங்கள்) வரை படிப்பு அல்லது பயிற்சியை மேற்கொள்ளலாம்.
  6. இரண்டாவது மற்றும் மூன்றாவது Work and Holiday (subclass 462) விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெற, ‘குறிப்பிடப்பட்ட பணியொன்றை’ பரிந்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்கு மேற்கொள்ளுதல்.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...