Sportsமுதல் அரையிறுதி நாளை – அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன -...

முதல் அரையிறுதி நாளை – அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன – FIFA உலகக்கிண்ணம்

-

கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான உலகக்கிண்ண உதைபந்து தொடரில், 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நொக்-அவுட்  சுற்றான 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்தன. நெதர்லாந்து , செனகல் (குழு- ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (குழு- பி), அர்ஜென்டினா, போலந்து (குழு- சி), பிரான்ஸ், அவுஸ்திரேலியா (குழு- டி), ஜப்பான், ஸ்பெயின், (குழு- இ), மொராக்கோ , குரோஷியா (குழு- எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (குழு- ஜி), போர்த்துக்கல், தென் கொரியா (குழு- எச்) ஆகிய 16 நாடுகள்  நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் நொக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்த்துக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், காலிறுதி சுற்றுகள் நேற்று முந்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. அத்தோடு டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் இறுதிப்போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளார் மன்னர் சார்ல்ஸ்

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய...

Al Jazeera அலுவலகத்தை மூடுமாறு இஸ்ரேல் உத்தரவு!

இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர்...

கிணற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள காணாமல் போன அவுஸ்திரேலிய சகோதரர்களின் சடலங்கள்

பல நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு அவுஸ்திரேலிய சகோதரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியின் சடலங்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிஎன்ஏ ஆதாரம் இல்லாமல்...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

T20க்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி

T20 உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள போட்டிக்கான போட்டி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியாவை...