Sportsதமிழ் பாரம்பரிய உடையில் அழகிய தமிழ் மகன் ஜடேஜா!

தமிழ் பாரம்பரிய உடையில் அழகிய தமிழ் மகன் ஜடேஜா!

-

தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்ததாக 150 போட்டிகளில் விளையாடிய 3ஆவது சிஎஸ்கே வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய தலைவராக ஜடேஜா நியமிக்கப்பட்டார். 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3ஆவது தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஆனால் சிஎஸ்கே அணி முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதாலும் தன்னுடைய துடுப்பாட்டம் மோசமானதாலும் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா. இதையடுத்து தலைவர் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா. தென்னிந்தியாவின் அடையாளத்தை உணர்கிறேன். தமிழ்க்காதல் என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, அழகிய தமிழ் மகன் எனக் குறிப்பிட்டு ஜடேஜாவின் புகைப்படத்தை சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...