இந்தியாவின் தமிழக மாநில தலைநகர் சென்னையில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி கிளையில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளில் 13 கோடி ரூபாய் வரை திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கி கிளைக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, Software Update செய்யும் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரின் காரணமாக இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பணம் எதுவும் வங்கி கணக்கிற்கு செல்லவில்லை என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குறுஞ்செய்தியை கண்டதும் சிலர் நேர்மையாக வங்கி கிளையை அனுகினாலும், பலர் உடனடியாக ஏடிஎம் சென்று பணத்தை எடுக்கச் சென்று, ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னையில் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள சில நகரிங்களிலும் இதே போல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனைகள் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.