கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக பிரத்யேக திட்டம்

0
149

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருத்தி இந்திய அரசு புதிதாக PM CARES என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை துவங்கி உள்ளது. இந்த திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று விளக்கமாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்த திட்டத்தின் படி, பெற்றோரை இழந்த பிள்ளைகளின் அன்றாட தேவைக்காக மாதந்தோறும் 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 18 வயது முதல் 23 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். பிள்ளைகளுக்கு 23 வயது நிறைவடையும் போது 10 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

ஆழுஷ்மான் மருத்துவ அட்டை பெற்றுள்ள குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசச் சிகிச்சை அளிக்கப்படும். எத்தகைய உதவியும், முயற்சியும் பெற்றோரின் அன்புக்கு ஈடாகாது. பெற்றோர் இல்லாப் பிள்ளைகளுக்குப் பாரதத் தாய் துணையிருக்கிறாள் என நம்பிக்கை அமிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.